திருத்தணி நரசிம்ம சுவாமி கோயிலில் உண்டியல் உடைத்து கொள்ளை

திருத்தணி, பிப். 21: திருத்தணி அருகே உள்ள நரசிம்ம சுவாமி கோயிலில் உண்டியலை உடைத்து மர்ம ஆசாமிகள் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம் காவேரிராஜபுரம் கிராமத்தில் நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலை கிராமத்து மக்களே பராமரித்து வருகின்றனர். கோயிலை சுற்றியும் சுற்று சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இந்த கோயில் வளாகத்தில் உண்டியல் ஒன்று வைக்கப்பட்டு உள்ளது. இதில் தினமும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கோயிலின் சுற்றுச்சுவர் மீது ஏறி வளாகத்தின் உள்ளே குதித்துள்ளனர். பின்னர், அங்குள்ள உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த கோயில் உண்டியல், வசூல் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறந்து எண்ணப்படுகிறது என்பதால் உண்டியலில் ₹50 ஆயிரம் இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் திருவாலாங்காடு  போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின்பேரில் போலீசார்  வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: