ஹோலிகிராஸ் பள்ளியில் ‘அக்மேலா’ விழா

சேலம், பிப்.21: சேலம் ஹோலிகிராஸ் பள்ளியில் மழலையர் தினவிழா உழவுத்தொழிலையும் உழவர்களையும் சிறப்பிக்கும் நோக்கத்தில் ‘அக்மேலா’ என்ற பெயருடன் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு ஹோலிகிராஸ் சபையின் இந்திய மண்டலத்தலைவர் அருட்சகோதரர் ஜான்ஜோசப் தலைமை வகித்தார். இவ்விழாவில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் குழந்தைவேல் முதன்மை விருந்தினராகவும், டிவியின் சிறப்பு தாளாளர் ராஜா திருவேங்கடம் சிறப்பு விருந்தினராகவும், தஞ்சை மாவட்டத்தில் உழவுத்தொழில் புதுமைப் பணிகள் செய்துவரும் குறிஞ்சிமலர் சிறப்பு அழைப்பாளராகவும் கலந்து கொண்டனர். இவ்விழாவில், சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உழவுத்தொழிலில் ஈடுபட்டு வரும் 15 விவசாயிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது. இதில் மாணவர்களின் விழிப்புணர்வு நாடகம், பாரம்பரிய நடனம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை இப்பள்ளி முதல்வர், நிர்வாக அலுவலர் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: