இடைப்பாடி நகராட்சியில் பிளாஸ்டிக் கேரிபேக் தடுப்பு விழிப்புணர்வு

இடைப்பாடி, பிப்.21: இடைப்பாடி நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:  தமிழக அரசின் உத்தரவின்படி, இடைப்பாடி நகராட்சி பகுதிகள் முழுவதும், ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கேரி பேக்குகளை உபயோகத்தை தவிர்க்கும் பொருட்டு, சேலம் மாநகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அசோக்குமார் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம், இன்று (21ம் தேதி) காலை 10.30 மணியளவில், ஜலகண்டாபுரம் சாலையில் உள்ள வைத்திலிங்கம் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தாசில்தார், ஆய்வாளர், சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இதில் வியாபாரிகள், வணிகர்கள், சுய உதவி குழுவினர்கள், பொதுமக்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: