கிருஷ்ணகிரியில் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் கண்காட்சி

கிருஷ்ணகிரி, பிப்.21: கிருஷ்ணகிரி சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பில்,  அனைத்து கட்டுமான பொருட்களுக்கான கண்காட்சி திறப்பு விழா, ராயக்கோட்டை மேம்பாலம் அருகே, சிட்கோ (பழைய ஆர்டிஓ அலுவலகம்) மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு திறப்பு விழா நடைபெற உள்ளது. எக்ஸ்போ தலைவர் ஆறுமுகம் தலைமையேற்று வரவேற்கிறார். சிறப்பு விருந்தினர்களாக டிஎஸ்பி சக்திவேல், முன்னாள் எம்பி அசோக்குமார், கட்டிகானப்பள்ளி ஊராட்சிமன்ற தலைவர் காயத்ரிதேவி கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி 123 (ஸ்டால்) அரங்குகள் கொண்ட கண்காட்சியை திறந்து வைத்து பேசுகின்றனர்.

இக்கண்காட்சி 21, 22 மற்றும் 23ம் தேதி என 3 நாட்கள் நடைபெற உள்ளது. இன்று மாலை 6 மணிக்கு கின்னஸ் புகழ் கார்த்திக் மேஜிக் நிகழ்ச்சியும், மிமிக்ரி முகிலன் கலைநிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. நாளை மாலை 6 மணிக்கு தினேஷ் பாடலுடன் பல்வகையான நடனம் மற்றும் கலைநிகழ்ச்சி நடைபெற உள்ளது. இக்கண்காட்சி காலை 10 மணிமுதல் இரவு 8மணி வரை நடைபெற உள்ளது. அனுமதி இலவசம். கிருஷ்ணகிரி சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியசன் தலைவர் யுவராஜ் நன்றி கூறுகிறார்

Related Stories: