தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை விறுவிறு

கரூர், பிப். 21: தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது குறித்து கண்காணிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு துவக்கத்தில் கரூர் ராயனூர் அருகில் லட்சக்கணக்கான மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, ஒரு சில மாதங்கள் கரூர் நகராட்சிப் பகுதிகளில் குட்கா பொருட்கள் விற்பனை இல்லாமல் இருந்தது.நாளடைவில் தற்போது பெரும்பாலான கடைகளில் மறைமுகமாக குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இளைஞர்கள் இதனை வாங்கி பயன்படுத்தும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ள இந்த புகையிலை பொருட்கள் கரூர் பகுதியில் விற்பனை நடைபெற்று வருவதாகவும், இதனை ஏராளமானோர் பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுபோன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: