நாங்குநேரி அருகே ராஜாக்கமங்கலம் கைலாசநாதர் கோயிலில் இன்று மகா சிவராத்திரி

நெல்லை, பிப். 21: நாங்குநேரி  வாகைகுளம் அருகே  ராஜாக்கமங்கலத்தில்  உள்ள சிவகாமி அம்பாள் உடனுறை கைலாசநாதர் கோயில் மகா சிவராத்திரி விழா இன்று (21ம் தேதி) நடக்கிறது. விழாவில் இன்று காலை 8 மணிக்கு மகா கணபதி ஹோமம் நடக்கிறது. காலை 9.30 மணிக்கு சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகம், கும்ப அபிஷேகம், 11 மணி, மாலை 5.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, 6.30 மணிக்கு பால்குட ஊர்வலம், இரவு 8 மணிக்கு முதல் காலபூஜை, தொடர்ந்து சுவாமி, அம்பாள்  ரிஷப வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. இரவு 9 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு இரண்டாம் காலபூஜையும், அதிகாலை 2 மணிக்கு மூன்றாம் கால  பூஜையும், காலை 4 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடக்கிறது. நான்கு கால  பூஜைகளில் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை  நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா நாகராஜன் மற்றும் கோபி, ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.  

இதேபோல் தென்காசி பெரியசாமி கோயில் தெரு தேவி சந்தன மாரியம்மன் கோயிலில் மகா சிவராத்திரி கொடை விழா, கடந்த 14ம் தேதி கால்நாட்டு வைபவத்துடன் தொடங்கியது. இன்று காலை 8 மணிக்கு பால்குடம், 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, மதியம் 1 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு தீர்த்தகுடம், இரவு 8 மணிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, இரவு 12 மணிக்கு மகா சிவராத்திரி சிறப்பு தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து நாளை (22ம் தேதி) காலை 8 மணிக்கு பிரசாதம் வழங்குதல் மாலை 4.30 மணிக்கு பொங்கலிடுதல், 6 மணிக்கு சந்தன காப்பு தீபாராதனை, மாவிளக்கு எடுத்தல், முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு சந்தன காப்பு, தீபாராதனை மற்றும் அன்னதானம் நடக்கிறது. 23ம்தேதி (ஞாயிறு) காலை 8 மணிக்கு மஞ்சள் நீராட்டு வைபவம், காலை 10.30 மணிக்கு முளைப்பாரியை சிற்றாற்றுக்கு  கொண்டு செல்லுதல் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் பூசாரி காசிவிஸ்வநாதன் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Related Stories: