தாராபுரத்தில் நடந்த கடையடைப்பால் நஷ்டம் தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு நிவாரணம் பெற்றுத்தர கோரிக்கை

தாராபுரம்,பிப்.21:தாராபுரத்தில் சப்கலெக்டர் தலைமையிலான விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் சப்-கலெக்டர் பவன்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க தலைவர் காளிமுத்து ஒரு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: தாராபுரம் தாலுகாவில் பட்டு வளர்ப்பு துறை அலுவலகம் எங்கு உள்ளது அதில் எந்த அதிகாரிகள் தாலுகா பகுதிகளில் பணியாற்றி வருகிறார்கள் என்பது விவசாயிகளுக்கு தெரியவே இல்லை. துறை சார்பில் பட்டு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு கிடைக்கக்கூடிய அரசின் மானியங்கள் என்ன ஆனது என்ற விபரங்கள் விவசாயிகளுக்கு இன்று வரை தெரிவிக்கப்படுவதில்லை எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கிராமப்புற விவசாயிகளை சந்தித்து பட்டு வளர்ச்சித் துறையின் செயல்பாடுகள், அரசு வழங்கும் மானியத் தொகை பற்றிய விவரங்களை விவசாயிகளுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகி சிவகுமார் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- கடந்த 19ம் தேதி தாராபுரத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் டீ ஸ்டால்கள், உணவு விடுதிகள், பேக்கரிகள், அனைத்தும் அடைக்கப்பட்டு கிராம விவசாயிகள் உழவர் சந்தை, மற்றும் தினசரி மார்க்கெட், தள்ளுவண்டி வியாபாரிகள் உள்ளிட்டோருக்கு விற்பனைக்காக கொண்டு காய்கறிகள் அனைத்தும் அழுகிப் போய் பெருத்த நஷ்டத்துக்கு ஆளாகினர்.

மேலும் கிராமங்களிலிருந்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட பல ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்ய வழியின்றி வீதியிலேயே கொட்டிச் செல்லும் நிலை ஏற்பட்டு ஏராளமான பால் உற்பத்தியாளர்கள் நஷ்டம் அடைந்துள்ளனர்.250க்கும் மேற்பட்ட சுமைதூக்கும் கூலித் தொழிலாளர்கள் ஒருநாள் வருவாயை இழந்து நஷ்டம் அடைந்துள்ளனர். எனவே போராட்டங்களை அறிவித்த அரசியல் கட்சிகள், அமைப்புகள், சங்கங்கள்தான் பொறுப்பேற்று விவசாயிகள், வியாபாரிகளுக்கான இழப்பீடு வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவின்படி உரிய இழப்பீட்டை அரசு பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.

Related Stories: