டானிங்டன் பிரிட்ஜ் பகுதியில் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும்

குன்னூர், பிப்.21: டானிங்டன் பிரிட்ஜ் பகுதியில் போக்குவரத்து இடையூறாக சாலையோரம் அமைக்கபட்ட கடைகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளர்.குன்னூர் நகராட்சிக்குட்பட்ட டானிங்டன் பிரிட்ஜ் பகுதியில் நகராட்சி மற்றும் வருவாய்த்துறையினருக்கு சொந்தமான இடங்கள் உள்ளது. சமீப காலமாக சிலர் இங்குள்ள நீரோடை, சாலையோரங்களில் ஆக்கிரமித்து கடை, வீடுகள் கட்டிவருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  இந்த சாலை சுற்றுலா தலங்களான லேம்ஸ்ராக், டால்பின் நோஸ் கரண்சி போன்ற பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலை உள்ளது. தற்போது இந்த பகுதியில் சிலர் 7க்கும் மேற்பட்ட கடைகள் அமைத்து ஆக்கிரமித்துள்ளதால் சாலை குறுகலாக காணப்படுகிறது.

இது குறித்து பொதுமக்கள் பலமுறை நகராட்சி மற்றும் வருவாய்த்துறையினருக்கு புகார் அளித்துள்ளனர். இதனடிப்படையில் நேற்று நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொண்டனர். இதில் பல பகுதிகளில் ஆக்கிரமித்து மின் இணைப்பு பெறப்பட்டது தெரிய வந்தது. ஆனால் பல கடைகள் ஆளுங்கட்சி சேர்ந்த பிரமுகர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே பாரபட்சமின்றி ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: