 கிருஷ்ணா கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்

கோவை, பிப். 21: கோவை குனியமுத்தூரில் உள்ள  கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவயில் துறையின் சார்பில் 13வது தேசிய அளவிலான கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி தலைமை வகித்தார். முதன்மை நிர்வாக அதிகாரி சுந்தராமன், கல்லூரி முதல்வர் பேபி ஷகிலா ஆகியோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக புனே இண்டஸ் மேலாண்மை கல்லூரியின் பொது இயக்குனர் நாராயணா பங்கேற்று பேசியதாவது: சர்வதேச அளவில் இந்தியா பொருளாதாரத்தில் பிரிட்டன், பிரான்சு நாடுகளை முந்தி வருகிறது. இருப்பினும், நாம் பொருளாதார வளர்ச்சியினை அடைய கடும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அனைவரின் ஒத்துழைப்பு இருந்தால் இலக்கை அடைய முடியும். வெளிநாட்டினர் நம் நாட்டில் முதலீடு செய்வதை உயர்த்த வேண்டும். அந்நிய முதலீட்டினை கவர நல்ல திட்டங்கள் வேண்டும். மேலும், இங்குள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பினை அதிகரிக்க வேண்டும். தற்போதைய 7 சதவீத சேமிப்பு விகிதத்தை அடுத்த 4 ஆண்டுகளில் 29 சதவீதமாக உயர்த்தினால் பொருளாதார வளர்ச்சியை அடையமுடியும். மேலும், பண வீக்கத்தினை 4.5 சதவீதத்திற்கு மேல் போகாமல் கட்டாயமாக கட்டுப்படுத்த வேண்டும். பொருளாதார வளர்ச்சியினை மேலும் அதிகரிக்க அரசு, தனியார் இணைந்து தொழில் வளர்ச்சியில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மேலும், வணிகவியல் துறைகள் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தினை எப்படி 2024க்குள் அடைவது? என்பது குறித்து கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. இதில், வணிகவியல் துறை தலைவர்கள் அன்புமலர், சந்தானலட்சுமி, விஜிமோல், சிவகுமார், தனலட்சுமி, ரீனா, பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் என பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: