சோமனூர் செந்தில் நகரில் சாலையில் குவிக்கப்பட்ட சாக்கடை கழிவுகள் அகற்றம்

சோமனூர்,பிப்.21: சோமனூர் உள்ள கருமத்தம்பட்டி பேரூராட்சி 15வது வார்டு செந்தில் 1 நகரில் கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 1 கோடியில் தார்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு துவங்கிய தார் சாலை போடும் பணி கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில் போக்குவரத்துக்காக தொடங்கப்பட்டது.ஊஞ்சப்பாளையம் பிரிவிலிருந்து செந்தில்நகர் ஒட்டன்தோட்டம் வரையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்ட தார்சாலை, தற்போது சாக்கடை கால்வாயில் தேங்கிக்கிடந்த சாக்கடை கழிவுகளை சாலையில் மலைபோல் குவித்துள்ளனர்.

இதனால் சாக்கடை கழிவுகள் சாலையில் குவிக்கப்பட்டதால் தற்போது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளதால் உடனடியாக சாக்கடை கழிவுகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து நேற்று 20ம் ேததி தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்து. இதன் எதிரொலியாக நேற்று சோமனூரில் உள்ள செந்தில் நகர் 15வது வார்டில் பகுதி சாலையில் மலைபோல் குவிக்கப்பட்டிருந்த சாக்கடை கழிவுகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர்.

Related Stories: