நார்த்தாம்பூண்டி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு ரத்தசோகை முகாம்

திருவண்ணாமலை, பிப்.21: திருவண்ணாமலை அடுத்த நார்த்தாம்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் மாவட்ட மைய நூலகம் சார்பில் ரத்தசோகை பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மருத்துவர் அருள்மொழி வர்மன் தலைமை தாங்கினார். மைய நூலகர் சாயிராம், நல்நூலகர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். இதில் 249 மாணவ, மாணவிகளுக்கு ரத்தசோகை பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.இதில் மருத்துவர் செந்தில், ரத்தசோகையின் அறிகுறிகள், நோயின் தன்மை மற்றும் விளைவுகள், தற்காத்து கொள்வது எப்படி, உணவு கட்டுப்பாடு மற்றும் மாணவர்கள் கேட்ட சந்தேகங்களுக்கு பதிலளித்து பேசினார்.முன்னதாக விழாவுக்கு வந்தவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் குப்புசாமி வரவேற்றார். முடிவில் கமலநாதன் நன்றி கூறினார்.

Related Stories: