போராட்டக்குழு வலியுறுத்தல் பாலியல் புகாருக்கு நடவடிக்கை எடுக்காத வட்டார கல்வி அலுவலரை கண்டித்து தர்ணா போராட்டம்

மயிலாடுதுறை,பிப்.21: செம்பனார்கோவில் அருகே நல்லாடை கிராமத்தில் ஆதி திராவிடர் தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளி 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பரமேஷ்வரன் மற்றும் இரண்டு பெண் ஆசிரியர்கள் வேலை செய்து வருகின்றனர்.இந்நிலையில் தலைமை ஆசிரியர் பரமேஷ்வரன் பள்ளி மாணவிகளுக்கும், பள்ளி பெண் ஆசிரியருக்கும் தொடர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து பெண் ஆசிரியரான ரூபியா தனது கணவர் சங்கமித்ரன் உடன் செம்பனார்கோவில் வட்டார கல்வி அலுவலர் சீனிவாசன் மற்றும் சீர்காழி ஆதி திராவிட நலத்துறை தாசில்தார் ராணியிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியர் ரூபியாவை பணி மாற்றம் செய்துள்ளனர். இதனை கண்டித்து பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியரின் கணவர் சங்கமித்ரன் செம்பனார்கோவில் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து போலீசார் பேச்சுவார்தை நடத்தி வருகின்றனர்.ç காரைக்காலில் ரூ.500 கோடியில் ஜிப்மர் கட்டுமானம் நடைபெறுவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மக்களவையில் அண்மையில் தெரிவித்தார்ç ஆனால் அதற்கான எந்தப் பணிகளும் காரைக்காலில் நடைபெறவில்லை என்பதை, மத்திய, மாநில அரசுகள் கருத்தில்கொள்ளவேண்டும்.

Related Stories: