அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே கீழமிக்கேல்பட்டியில் ஜல்லக்கட்டு போட்டி

தா.பழூர், பிப்.20: அரியலூர் மாவட்டம் தாபழூர் அருகே உள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலய ஜல்லிக்கட்டு விழா கீழமிக்கேல் பட்டி கிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பெரியய்யா கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் ஜெயங்கொண்டம் டிஎஸ்பி மோகன்தாஸ், ஆர்டிஓ பூங்கோதை ஆகியோர் கலந்து கொண்டனர். ஜெயங்கொண்டம் தாசில்தார் கலைவாணன் மாடுபிடி வீரர்களுக்கு உறுதிமொழியை வழங்கினார். இதற்கு ஊரில் ஓரமாக வாடிவாசல் அமைக்கப்பட்டு அதில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மாடுபிடி வீரர்கள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வாடிவாசல் அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 300 காளைகளும் 200 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கும் அதில் பிடிபடாமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், தங்ககாசு, வெள்ளிகாசு, கட்டில், பீரோ, குடம், சேர் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

இதில் காளைகளின் உரிமையாளர்கள் தங்கள் காளை மீது பணம், தங்ககாசு உள்ளிட்டவைகளை பரிசாக அறிவித்தனர். இதில் தஞ்சை, பெரம்பலூர், திருச்சி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் பங்கேற்றன. இதில் பாதுகாப்பு பணிக்காக காவல் துறையினர் ஈடுபட்டிருந்தனர். பாதுகாப்பு பணியில் தீயணைப்பு துறையினரும் ஈடுபட்டிருந்தனர். இதில் காயம் அடைந்தவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை வழங்க மருத்துவர்களும் 108 வாகனமும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதில் 30க்கும் மேற்பட்ட வீரர்கள் காயம் அடைந்தனர். உடையார்பாளையத்தை சேர்ந்த சரவணன் (16) மற்றும் காசாங்கோட்டையை சேர்ந்த அறிவுச்செல்வன் (25) ஆகியோர் பலத்தகாயம் அடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமணைக்கு கொண்டு செல்லபட்டனர்.

Related Stories: