அரசு துறைகளில் காலிப்பணியிடம் நிரப்ப கோரி வாலிபர் சங்கம்ஆர்ப்பாட்டம்

நீடாமங்கலம், பிப்.20: நீடாமங்கலம் பெரியார் சிலை அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நீடாமங்கலம் ஒன்றிய தலைவர் கிஷோர்குமார் தலைமை வகித்தார். வலங்கைமான் ஒன்றிய செயலாளர் ஜெயராஜ் முன்னிலை வகித்தார். திருவாருர் மாவட்ட செயலாளர் ஜோதிபாசு, மாவட்டத் தலைவர் அகமது சலாவுதீன், மாவட்ட பொருளாளர் இளங்கோவன், நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் ஜான்கென்னடி, மாவட்ட செயற்குழு விஜய், நீடாமங்கலம் ஒன்றிய பொருளாளர் அருள்குமார் மற்றும் நீடாமங்கலம், வலங்கைமான ஒன்றிய குழு நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும். அரசு பணிகளை ஒழிக்கும் அரசாணை 56ஐ வாபஸ் பெற வேண்டும். தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையத்தில் நடைபெறும் ஊழலை தடுத்து நிறுத்தி தகுதியான இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும். முறைசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அரசியல் அமைப்புச் சட்டத்தை திருத்தி வேலை உரிமையை அடிப்படை உரிமையாக்க வேண்டும். படிப்புக்கு ஏற்ற திறமைக்கு ஏற்ற சமூக பாதுகாப்பான வேலை கோடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: