மன்னார்குடியில் சைவ சித்தாந்த பயிற்சி பெற்றோருக்கு சான்றிதழ்

மன்னார்குடி, பிப்.20: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இயங்கும் சிவனடியார் திருக்கூட்டத்தின் சார்பில் திருவாடுதுறை ஆதீனத்தின் சைவ சித்தாந்த நேர்முக பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு நிறைவு விழா மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.மன்னார்குடியில் சைவ சித்தாந்த பயிற்சி மையம் கடந்த 2018ம் ஆண்டில் துவக்கப்பட்டது. இதன் மூலம் நடைபெற்ற தொகுப்பு பயிற்சி வகுப்புகளில் 78 பேர்கள் சேர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக சைவ சித்தாந்த பயிற்சிகளை பெற்று வந்தனர்.இந்நிலையில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக திருக்கூட்ட புலவரும் சைவ சித்தாந்த பேராசிரியருமான குடவாசல் ராமமூர்த்தி பங்கேற்று முதல் தொகு ப்பு பயிற்சியில் பங்கேற்ற 78 பேர்களுக்கு திருவாடுதுறை ஆதினம் குருமகா சன்னிதானத்தால் கையொப்பம் இடப்பட்டு அளிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்கி பேசினார்.இதில் திருக்கூட்ட நிர்வாகிகள் பேராசிரியர் பாலசுப்ரமணியன், முத்து அருணகிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மேலும், சைவ சித்தாந்த 2 ம் தொகுப்பு பயிற்சிகள் தற்போது துவங்கி யுள்ள தாகவும், ஒவ்வொரு மாதமும் மூன்றாம் ஞாயிற்று கிழமை வகுப்புகள் நடை பெறும், பயிற்சி காலம் 2 ஆண்டுகள் என்றும், எழுத படிக்கச் தெரிந்தவர்கள் இப்பயிற்சியில் சேரலாம் எனவும் திருக்கூட்ட நிர்வாகிகள் கூறினர்.

Related Stories: