குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரி இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, பிப்.20: கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகே, அண்ணா சிலை எதிரில், அனைத்து பள்ளி வாசல் தலைவர்கள், அனைத்து உலமாக்கள், இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில், தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்ட அரசு காஜி கலீல்அகமத் தலைமை வகித்தார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் முகமத்அப்துல் பாரூக் வரவேற்றார்.  ஷாஹி மஸ்ஜித் தலைவர் முஸ்தாக் அகமத், டவுன் கமிட்டி தலைவர் இர்பானுல்லா உசைனி, தமுமுக மாவட்ட தலைவர் நூர்முகமது, திமுக நகர செயலாளர் நவாப், குடியாத்தம் மேல்ஆலந்தூர் மதரஸா நிஸ்வான் நடுநிலைப்பள்ளி தலைவர் பைரோஸ்அகமத், ஜம்இய்யத் உலமா மாவட்ட தலைவர் அல்தப் அகமத் சித்தீகி, பூரா மஸ்ஜித் துணைத் தலைவர் காதர்உசேன், எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் அஸ்கர்அலி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் அன்வர்பாஷா, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் இர்ஷாத் அகமத், காங்கிரஸ் வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் முபாரக், காங்கிரஸ் எஸ்சி துறை மாநில துணைத் தலைவர் ஆறுமுகசுப்பிரமணி, மீலாது நபி குழு தலைவர் அஸ்லம் ரஹ்மான்ஷெரீப், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில செய்தி தொடர்பாளர் திராவிடராஜா உள்ளிட்டோர் பங்கேற்று கண்டனவுரையாற்றினர்.  தன்ஜீமுல் உலமா தலைவர் ஷபீர்அகமத் நன்றி கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய அரசின் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதனை ரத்து செய்ய கோரியும், தேசிய மக்கள் தொகை பதிவேட்டை நிறுத்தக் கோரியும், என்ஆர்சி போன்ற சடத்தை நீக்ககோரியும், சிஏஏ சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரி கண்டன முழுக்கங்களை எழுப்பினர். இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். பின்னர், கலெக்டர் அலுவலகம் சென்ற முக்கிய நிர்வாகிகள் கோரிக்கை அடங்கிய மனுவை கலெக்டர் பிரபாகரிடம் வழங்கினர். ஆர்ப்பாட்டத்தினையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: