சூளகிரி உண்டு உறைவிடப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி

சூளகிரி, பிப்.20: சூளகிரி அரசு உண்டு உறைவிடப்பள்ளியில், அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. சூளகிரி அருகே கொல்லப்பள்ளியில் செயல்பட்டு வரும்  அரசு உண்டு உறைவிடப்பள்ளியில் 100க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் மாணவ, மாணவிகள் அறிவியல் கண்காட்சியை நடத்தினர். கண்காட்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் துவக்கி வைத்து பார்வையிட்டார். இதில் 50க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. கண்காட்சியை சூளகிரி தாசில்தார் ரெஜினா, துணை தாசில்தார் மலர்விழி, செயலர் சந்திரசேகர், மாணவிகள் கல்வி வளர்ச்சி பெற 10 லேப்டாப்களை இலவசமாக வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகி வெஸ்லி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சர்தார், கனேசன், ராஜா மேற்பார்வையாளர் சுரேஷ், ஒருங்கிணைப்பாளர் சங்கரன், ஆசிரியர் பயிற்றுனர் கீதா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இக்கண்காட்சியில் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை சேர்ந்த நாணய கண்காட்சியாளர் தாமரை, மன்னர் காலத்து பத்திரம், நாணயம், தபால் தலை, புதிய 1000 ரூபாய் நாணயம் ஆகியவற்றை பார்வைக்கு வைத்து, மாணவிகளுக்கு விளக்கம் அளித்தார்.

Related Stories: