ஓசூரில் போலீஸ் ஸ்டேஷன் திறப்பு

ஓசூர், பிப்.20: ஓசூரில் புதிய டவுன் போலீஸ் ஸ்ேடஷனை வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்வர் திறந்து வைத்தார். ஓசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே, புதிய டவுன் போலீஸ் ஸ்ேடஷன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தை முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். இதுகுறித்து டவுன் போலீஸ் ஸ்ேடஷன் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் கூறுகையில், ‘ஓசூர் ராயகோட்டை சாலையில் உள்ள புதிய கட்டிடத்தை முதல்வர் கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்துள்ளார். இது இரண்டடுக்கு கட்டிடம், சுமார் ஒரு ஏக்கர் பரப்பில் 3957 சதர அடியில் ₹1.2 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார். இதுநாள் வரை தாலுகா அலுவலக வளாகத்தில் இயங்கி வந்த டவுன் போலீஸ் ஸ்ேடஷன் இன்று (நேற்று) முதல் புதிய கட்டிடத்தில் செயல்பட தொடங்கும்,’ என்றனர். இதில் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: