வேப்பனஹள்ளியில் இலவச சைக்கிள் வழங்கல்

வேப்பனஹள்ளி, பிப்.20: வேப்பனஹள்ளி அருகே உள்ள அரசு மாதிரிப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன. வேப்பனஹள்ளி அருகே கே. திப்பனப்பள்ளியில் உள்ள மாதிரிப்பள்ளியில் 97 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், மாவட்ட அச்சக துணைத் தலைவரும், ஒன்றிய செயலாளருமான முனியப்பன் கலந்து கொண்டு இலவச சைக்கிள்களை வழங்கினார்.நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர் திம்மராஜ், வீட்டு வசதி வங்கி குழு துனைத் தலைவர் முருகன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குமரேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Related Stories: