அரசு பள்ளியில் மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம்

காரிமங்கலம்,  பிப்.20: பழைய தர்மபுரி அரசு மேல்நிலைப்பள்ளியில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு  சார்பில், கள்ளச்சாராயம் மற்றும் போதைக்கு அடிமையாவதற்கு எதிரான  விழிப்புணர்வு பிரசார முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமை வகித்து பேசுகையில், ‘மது குடிப்பதால் நரம்பு மண்டலம் பாதிக்கிறது. மது அருந்துபவரையும், அவரை சார்ந்த குடும்பத்தையும்,  நாட்டையும் அழிக்கிறது. மாணவ, மாணவிகள் மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் முற்றிலும்  ஒழிக்கப்பட்டு விட்டது. டூவீலர் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்,’ என்றார். தொடர்ந்து நடந்த பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, விநாடி-வினா போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், எஸ்எஸ்ஐ சின்னசாமி, ராமகிருஷ்ணன்,  கௌரன், ஏட்டுக்கள், தலைமை ஆசிரியை சுமித்ரா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: