வாகனஓட்டிகள் கோரிக்கை பெருநாவலூர் அரசு கல்லூரியில் முதுகலை மாணவர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம்

அறந்தாங்கி, பிப்.20: ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒருநாள் பயிலரங்கம் நடைபெற்றது. இப்பயிலரங்கிற்கு கல்லூரி முதல்வர் கண்ணன் தலைமை ஏற்று துவக்கி வைத்து பேசினார். பயிலரங்கில் ஜே.சி.ஐ தேசிய பயிற்சியாளர் சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வாழ்க்கையின் மொழியை அறிவோம் எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றுகையில், நாளைய உலகின் சிற்பிகளான மாணவர்கள் முதலில் வாழ்க்கைக்கும் பாடத்திட்டத்திற்கும் உள்ள வேறுபாடுகளை உணர வேண்டும். பாடத்திட்டம் என்பது இன்னொருவம் கற்றுக்கொண்டதின் வெளிப்பாடு. வாழ்க்கை என்பது நீங்களாகவே கற்று தேர்வது. இன்று நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதை நாளை அறுவடை செய்யலாம். நம்பிக்கையை விதைத்தால் வெற்றியை அறுவடை செய்யலாம்.சந்தோஷத்தை விதைத்தால் அதையே பரிசாகப் பெறலாம் சாதனையாளர்கள் யாரும் உருவாக்கப்படுவதில்லை அவர்கள் தானாகவே உருவாகினார்கள். மிகுந்த தன்னம்பிக்கையோடு அனைவரும் வெற்றிபெற வேண்டும் என்று

பேசினார்.இப்பயிலரங்கில் பல்துறை மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் செந்தில்குமார் வரவேற்றார். உதவி பேராசிரியர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Related Stories: