மயான கொள்ளை திருவிழாவையொட்டி தேர் ஊர்வலம் பகல் 2 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிக்குள் முடிக்க வேண்டும் காட்பாடி ஆலோசனை கூட்டத்தில் டிஎஸ்பி பேச்சு

வேலூர், பிப்.20:மயான கொள்ளை திருவிழாவையொட்டி தேர் ஊர்வலம் பகல் 2 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிக்குள் முடிக்க வேண்டும் என்று விழாக்குழுவினருடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் டிஎஸ்பி துரைபாண்டியன் பேசினார்.வேலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஆண்டுதோறும் மாசி மாத அமாவாசையன்று மயான கொள்ளை திருவிழா நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான மயான கொள்ளை திருவிழா வரும் 23ம் தேதி கொண்டாடப்பட்டது.விழாவையொட்டி வேலூர் சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், சத்துவாச்சாரி, விருதம்பட்டு மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் அங்காளபரமேஸ்வரி அம்மனை அலங்கரித்து கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்வது வழக்கம். பல இடங்களில் சாமியை தேரில் வைத்து எடுத்து செல்வார்கள்.இந்நிலையில் விருதம்பட்டு காவல் நிலையத்தில் மயான கொள்ளை திருவிழா குறித்து ஆலோசனை கூட்டம் நேற்றிரவு நடந்தது. காட்பாடி தாசில்தார் பாலமுருகன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் புகழ் வரவேற்றார்.

இதில் டிஎஸ்பி துரைபாண்டியன் கலந்து கொண்டு பேசியதாவது:மயான கொள்ளை திருவிழா பகல் 2 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிக்குள் முடிக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடக்க உள்ளதால் இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்க முடியாது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே முன்கூட்டியே விழா முடித்து கொள்ள வேண்டும்.அதேபோல் பேனர்கள், கட்அவுட்கள் வைக்க கூடாது. இதை கட்டாயம் விழா குழுவினர் கடைப்பிடிக்க வேண்டும். அன்றைய தினம் 8 மணி நேரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். அதாவது வேலூர் புதிய பாலாற்று மேம்பாலத்தின் வழியாக தான் விருதம்பட்டில் இருந்து தேர் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. அதேபோல் ேதரில் 2 பேர் மட்டுமே அமர்ந்து இருக்க வேண்டும். மற்றவர்கள் யாரும் அமரக்கூடாது.

Related Stories: