பள்ளிகொண்டாவில் மனநலம் பாதித்த கர்ப்பிணி காப்பகத்தில் ஒப்படைப்பு சமூக ஆர்வலர்கள் நடவடிக்கை

பள்ளிகொண்டா, பிப்.20: பள்ளிகொண்டாவில் மனநலம் பாதித்த கர்ப்பிணி சமூக ஆர்வலர்கள் நடவடிக்கையால் காப்பக்கத்தில் ஒப்படைக்கப்பட்டார்.பள்ளிகொண்டாவில் கடந்த ஒரு மாத காலமாக கர்ப்பமாக இருக்கும் மனநலம் பாதித்த ஒருவர் பள்ளிகொண்டா- குடியாத்தம் சாலைகளிலும், அப்பகுதியில் உள்ள கோயில்களின் அருகிலும் சுற்றித்திரிந்து வந்தார். அவரை காப்பத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று முன்தினம் தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

இதையடுத்து சமூக ஆர்வலர்கள் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்னை மீட்டு பள்ளிகொண்டா காவல் துறையினர் மூலம் வேலூரில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.விசாரணையில் அவர் குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், அங்குள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வந்தாராம். ஆனால், 15 மாதங்களாக சம்பளம் தரவில்லை என தெரிவித்தார். மேலும், அத்தொழிற்சாலையில் பணிபுரியும் பாதுகாவலர் மூலம் கர்ப்பமானதாக தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து அப்பெண் சிகிச்சை முடிந்த பிறகு புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்தனர்.

Related Stories: