பெரம்பலூர் அரசு பள்ளி வளாகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி

பெரம்பலூர், பிப்.19: பெரம்பலூர் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிய ருக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி. டிஆர்ஓ தொடங்கி வைத்தார். பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், பெரம்பலூர் மாவட்ட வே லைவாய்ப்புத் துறை சார்பில் பெரம்பலூர் மாவட்ட அளவிலான பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் சீர்மரபினர் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு, வாழ்க்கைக்கு வழிகாட்டி நெறிமு றைகள் எடுத்துச் சொல்லுதல், அவர்கள் தனது படிப்பு முடிந்ததும் தன் வாழ்க்கை முறையை எவ்வாறு அமைத்துக் கொண்டால் முன்னே ற்றம் அடையலாம் என்றும், பள்ளிப்படிப்பு முடிந்ததும் மேற்படிப்பு என்னபடிப்பு படித்தால், எதிர்கால வாழ்க்கைக்கு அதுபயனுள்ளதாக இருக்கும் என்பதையும் விளக்குவதற்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.இந்தப் பயிற்சிக்கான தொடக்க விழாவிற்கு பெரம்பலூர் மாவட்டவருவாய் அலு வலர் ராஜேந்திரன் கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்புத் துறை அலுவலர் முரளிதரன் வர வேற்றார். பெரம்பலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோ ர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் விஜயன் முன்னிலை வகித்தார்.

பெரம்பலூர் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக் கத்தின் இணை இயக்குனர் தேவநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலக துணை இயக்குனர் லெப்டி னன்ட் கமாண்டர் சங்கீதா, பெரம்பலூர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருள், திருச்சி ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்று விப்பு மைய உதவி இயக்குனர் கலைச்செல்வன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மைய இயக்குனர் அகல்யா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.முடிவில் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்புத்துறையின் இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் செல்வக்குமார் நன்றி தெரிவித்தார். இப்பயிற்சியில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளிக் கல்வி மாணவ, மாணவியர் 649 பேர், கல்லூரி மாணவ மாணவியர் 655 பேர் என மொத்தம் 1,304 மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு ள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: