பிளாஸ்டிக் ஸ்ட்ராவுக்கு பதிலாக பப்பாளி மர தண்டு வினியோகம் விற்பனைக்கு ஏற்ற ஆடு ரகங்களை தேர்வு செய்து வளர்ப்பதன் மூலம் அதிக வருமானம் பெறலாம் பயிற்சி முகாமில் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

தா.பழூர், பிப்19: விற்பனைக்கு ஏற்ற ஆட்டு ரகங்களை தேர்வு செய்து வளர்ப்பதன் மூலம் அதிக வருமானம் பெறலாம் என சோழமாதேவியில் நடைபெற்ற ஆடு வளர்ப்பு பயிற்சி முகாமில் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கிரீடு வேளாண் அறிவியல் மையம் சோழமாதேவியில் வருமானம் தரக்கூடிய ஆடு வளர்ப்பு பயற்சி நடைபெற்றது. மையத்தின் மூத்த விஞ்ஞானி மற்றும் தலைவர் முனைவர் அழகுகண்ணன் ஆடு வளர்ப்பு மிகச் சிறந்த தொழிலாகும், விற்பனைக்கு ஏற்ற ஆட்டு இரகங்களை தேர்வு செய்து வளர்ப்பதன் மூலம் அதிக வருமானம் பெறலாம். மேலும் ஆடு வளர்ப்பில் தீவன முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். எனவே, விவசாயிகள் மற்றும் படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு நல்ல வருமானம் தரக்கூடிய ஒரு தொழிலாக அமையும் இது போன்ற லாபகரமான தொழில் செய்ய இளைஞர்கள் முன்வரவேண்டும் என்று கூறினார்.

கால்நடை மருத்துவர் வாசுகி ஆட்டு இனங்கள், நாட்டுக் கோழி ஆடு வளர்ப்பு முறைகள், நோய் மேலாண்மை மற்றம் தடுப்பூசி அட்டவணை பற்றி விரிவாக எடுத்து கூறினார். மேலும் பசுந்தீவன சாகுபடி முறை பற்றி மையத்தின் உழவியல் தொழில்நுட்ப வல்லுநர் திருமலைவாசன் எடுத்து கூறினார்.முன்னதாக பயிற்சிக்கு வந்தவர்களை மையத்தின் வேளாண் விரிவாக்க தொழில்நுட்ப வல்லுநர் ராஜ்கலா வரவேற்று மையத்தின் செயல்பாடுகள் குறித்து கூறினார். மேலும் பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளை மையத்தில் உள்ள ஆடு வளர்ப்பு செயல்விளக்கத்திடல் மற்றும் அசோலா வளர்ப்பு செயல்விளக்கத்திடலுக்கு மைய பண்ணை மேலாளர் பிரபு அழைத்து சென்று காண்பித்து சந்தேகங்களுக்கு பதில் அளித்தார். இப்பயிற்சிக்கு 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.பயிற்சியின் நிறைவாக பயிற்சி பெற்ற அனைவருக்கும் பயிற்சிக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முடிவில் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர் ராஜஜோஸ்லின் நன்றி கூறினார்.

Related Stories: