சுற்றுலா பயணிகளுக்காக மாமல்லபுரத்துக்கு கூடுதல் பஸ்கள் இயக்கவேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

மாமல்லபுரம், ஜன. 29: மாமல்லபுரத்துக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் வந்து, சந்தித்துப் பேசினர். பின்பு, அவர்கள் பல்லவர் கால சிற்பங்களான வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் ஆகியவற்றை கண்டு ரசித்து அவற்றின் முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இருநாட்டு தலைவர்கள் வந்து சென்ற பிறகு மாமல்லபுரத்துக்கு சர்தேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இரு நாட்டு தலைவர்கள் சுற்றிப் பார்த்த இடங்களை காண தினமும்  2000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வரும் பயணிகள் மீண்டும் வீடு திரும்ப போதுமான பஸ்கள் இல்லை.

இதனால், நீண்ட நேரம் பஸ் நிலையத்தில் காத்து கிடக்க வேண்டிய நிலை உள்ளது. இதையொட்டி, கடும் சிரமம் அடைகின்றனர். எனவே, அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் உடனடியாக, மாமல்லபுரத்துக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மாமல்லபுரம் உலக புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக உள்ளது. இருநாட்டு தலைவர்கள் வந்து சென்ற பின்பு மாமல்லபுரத்துக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அவர்கள் சுற்றிப் பார்த்த இடங்களை காண தினமும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகின்றனர். இவர்கள், மீண்டும் வீடு திரும்ப போதுமான பஸ்கள் இல்லை. எனவே கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: