நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெரிசல் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது

நீடாமங்கலம்,ஜன.29: நீடாமங்கலம் வர்த்தகர் சங்கம் சார்பில் அதன் தலைவர் ராஜாராமன் தலைமையில் தமிழக முதல்வர்,திருவாரூர் கலெக்டர் மற்றும் பல அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:  நீடாமங்கலம் அண்ணாசாலை கடைவீதியிலிருந்து ரயில் நிலையம் வரை உள்ள இடைப்பட்ட தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அடிக்கடி போக்குவரத்து நெரிசலால் பல விபத்துக்கள் ஏற்படும் பகுதியாக உள்ளது.இந்நிலையில் நீடாமங்கலம் கடைத்தெரு வடக்குப்பகுதியில் டாஸ்மாக் கடை ஏற்கனவே உள்ளது.இந்நிலையில் ரயில் நிலையத்திற்கும் அண்ணாசிலைக்கும் இடைப்பட்ட பகுதியில் போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படும் என்பது தெரிந்தே. பொது மக்கள் மீது அக்கரையில்லாமல் சிலரால் டாஸ்மாக் கடை கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.மேற்படி பகுதியில் இந்து,கிறிஸ்தவர்கள்,முஸ்லிம் வழிபாட்டு தலங்கள் உள்ளது.

மேற்படி பகுதியில் டாஸ்மாக்கடை கொண்டு வந்தால் பள்ளி செல்லும் மாணவர்கள்,பெண்கள் என அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதுடன் மதுபான கடைக்கு வருபவர்களின் வாகனங்களால் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதுடன் விபத்துகள் உயிர் சேதம் அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளது.வியாபாரிகளுக்கும் மிகுந்த சிரமம் ஏற்படும் என்பதால் மாணவர்கள்,பெண்கள் உள்பட பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் மீது அக்கரையுடன் தாங்கள் தகுந்த நடவடிக்கை எடுத்து நீடாமங்கலம் கடை வீதியில் டாஸ்மாக் கடை கொண்டுவராமல் தடுக்கவேண்டும் என்றார்.

Related Stories: