தொழிலாளர் துறை அதிரடி மாணவர்களிடம் ஒழுக்கநெறி பண்புகளை வளர்க்க வேண்டும் பயிற்சி முகாமில் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

மன்னார்குடி, ஜன. 29: அரசு பள்ளிகளில் பணியாற்றும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர் களுக்கு நிஷ்தா பயிற்சி மன்னார்குடி அருகே மேலவாசலில் உள்ள சதாசிவம் கதிர்காமவள்ளி பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை மற்றும் தமிழக பள்ளிக் கல்வித் துறை இணைந்து தமிழக அரசுப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதல் 5 நாட்கள் கொண்ட நிஷ்தா பயிற்சியினை அளித்து வருகிறது. ஏற்கனவே 11 கட்ட பயிற்சிகள் முடிந்த நிலையில் நேற்று 12 ம் கட்ட நிறைவு பயிற்சியின் தொடக்க விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மன்னார்குடி வட்டார வள மைய மேற்பார்வையாளர் ரவிச் சந்திரன் தலைமை வகித்தார். இந்த பயிற்சியை துவக்கி வைத்து தொடக்க உரை ஆற்றிய மன்னார்குடி அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் துணை முதல்வர் செல்வி பேசுகையில், இன்றைய நவீன காலகட்டத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வியை போதிப்பதைக் காட்டிலும் ஒழுக்க நெறிக் கருத்துகளை மாணவர்களிடம் விதைத்து மானுடப் பண்புகளை அவர்களிடம் வளர்பதில் ஆசிரியர்கள் அதிக அக்கறை காட்ட வேண்டும் என்றார். பயிற்சியின் கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் விரிவுரை யாளர்கள் சத்தியா, சரஸ்வதி, ஆசிரியர் பயிற்றுநர்கள் மணிகண்டன், செல்வ மணி, கலைவாணி ஆகியோர் செயல்பட்டனர். இந்த பயிற்சியை மன்னார்குடி வட்டார கல்வி அலுவலர் ராமசாமி பார்வையிட்டு வாழ்த்துரை வழங்கினார். இந்த பயிற்சியில் கோட்டூர், மன்னார்குடி, முத்துப்பேட்டை, திருத்துறைப் பூண்டி, நீடாமங்கலம் ஆகிய 5 ஒன்றியங்களில் இருந்து 130 ஆசிரியர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். முன்னதாக பயிலரங்கின் ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் வரவேற்றார்.

Related Stories: