குடியரசு தின விழாவில் ஊராட்சி தலைவரை தள்ளிவிட்ட சம்பவத்தில் 14 பேர் மீது வழக்கு

கறம்பக்குடி, ஜன.29: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம் பல்லவராயன்பத்தை ஊராட்சியில் குடியரசு தினத்தன்று நடந்த விழாவில் தலைவர் இந்திரா அரசு உயர் நிலைப் பள்ளியில் கொடியேற்ற சென்றார். அப்போது மற்றொரு தரப்பினர் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக நியமனம் தொடர்பாக பிரச்னை உள்ளது, எனவே ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா கொடியேற்ற கூடாது என்று கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட தகராறில் ஊராட்சி மன்ற பெண் தலைவர் இந்திரா கொடி மேடையில் இருந்து கீழே தள்ளி விட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பெண் ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா கறம்பக்குடி போலீசில் கொடுத்த புகார் கொடுத்தார். இதன்பேரில் ராஜா, நாடிமுத்து, பக்தவச்சலம், சொலையன், மாரிமுத்து, ஆறுமுகம், முருகேசன், சண்முகம், பிரபு உள்ளிட்ட 14 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.இதேபோல எதிர்தரப்பை சேர்ந்த நாடிமுத்து கொடுத்த புகாரின் பேரில் ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா தரப்பை சேர்ந்த ராமையன், பாலசுப்ரமணியன், சுப்பையா, திருப்பதி, வீரக்கண்ணு ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் பல்லவராயன்பத்தை ஊராட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: