3 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடக்கிறது அரசு போக்குவரத்து கழக டெப்போவில் சட்டப்பேரவை பொதுநிறுவன குழு ஆய்வு

பெரம்பலூர்,ஜன.29: பெரம் பலூர் அரசுப் போக்குவரத் துக் கழக டெப்போ, கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேர வை பொது நிறுவனங்கள் குழுநேரில்ஆய்வுமேற்கொண்டது. தமிழ்நாடு சட்டமன்றப் பேர வை பொது நிறுவனங்கள் குழு 2018-2020 பெரம்பலூர் மாவட்டத்தில்,கொள்ளிடம் ஆற்றிலிருந்து நீர் ஏற்றம் செய்யப்பட்டு வரும் குடி நீரானது நாரணமங்கலத் தில் நீரேற்றும் நிலையத்தி லிருந்து பெரம்பலூர், ஆலத்தூர் மற்றும் வேப்பந்தட்டை ஒன்றியங்களை சேர்ந்த 306 கிராம குடியிருப்புகள் மற்றும் பூலாம்பாடி அரும் பாவூர் பேரூராட்சிகளுக்கு குடிநீர் வழங்கும் பொருட்டு இத்திட்டத்தின் மூலம் 2,83,278 மக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குடிநீர் ஏற்றத் தொட்டியில் நாள் தோறும் ஆறு மில்லியன் கன லிட்டர் குடி நீர் பம்ப் செய்யப்பட்டு வரு கிறது. அதனடிப்படையில் இதன் செயல்பாடுகள் குறி த்து சட்டப்பேரவை குழுவி னர் நேரில் ஆய்வு செய்து ஒரு நாளைக்கு பெரம்ப லூர் மாவட்டத்திற்கு பம்ப் செய்யப்படும் நீரின் அளவு குறித்தும் ஆய்வு மேற்கொ ண்டனர். அதனைத்தொடர் ந்து பெரம்பலூர் துறைமங் கலத்தில் அரசுப் போக்குவ ரத்து கழக பணிமனையில் குழுவினர் ஆய்வு செய்து பொதுமக்களின் பயன்பாட் டிற்காக நாள்தோறும் இயக் கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை குறித்தும், வழித்தடங்கள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொண்டனர். இக்கள ஆய்வின்போது குழுவின் தலைவர் (அதி முக) செம்மலை, குழு உறுப் பினர்கள் (திமுக) பிச்சா ண்டி, (திமுக) கோவி.செழி யன், (அதிமுக) சண்முகம், கலெக்டர் (பொ) ராஜேந்திரன், குழு செயலாளர் சீனிவாசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை யின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் சுப்பிரமணியம் உள்ளிட்டப்

பலர் உடனிருந்தனர்.

Related Stories: