திருட்டு பைக்குகளில் வழிப்பறி அதிகரிப்பு: குற்றத்தடுப்பு சிறப்பு பிரிவு ஏற்படுத்த கோரிக்கை

திருவள்ளூர், ஜன. 29: திருட்டு பைக்குகளில்சென்று வழிப்பறி செய்பவர்களை கைது செய்ய குற்றத்தடுப்பு சிறப்பு பிரிவு ஏற்படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத் துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் பட்டப்பகலில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த 4 நாட்களுக்கு முன்,  திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி விஜயா(55) என்பவரிடம், பைக்கில் சென்றவர்கள் 7 சவரன் செயினை பறித்து தப்பினர். இதுபோன்று மாவட்ட அளவில் நடக்கும் பெரும்பாலான செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபடும் கும்பல், பைக்குகளை திருடி செல்லும் வழியில் தனியாக நடந்து செல்லும் பெண்களை மறித்து செயின் பறிப்பில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.

பெரும்பாலான செயின் பறிப்பு புகார்களை போலீசார் வழக்கு பதிய மறுப்பதால் வழிப்பறி சம்பவங்கள் தெரியாமல் போய்விடுகிறது. வழிப்பறியில் ஈடுபடும் கும்பல் விட்டுச்செல்லும் பைக்குகளின் உரிமையாளர்களை அழைத்து, விசாரணை என்ற பெயரில் போலீசார் அலைக்கழிக்கின்றனர்.  தொடர் வழிப்பறியில் ஈடுபடும் கும்பலை பிடிக்க, குற்ற வழக்குகளை கையாளுவதில் சிறப்பாக செயல்படும் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., போலீசார்களை கொண்டு மாவட்ட அளவில் குற்றத்தடுப்பு சிறப்பு பிரிவினை ஏற்படுத்தி வழிப்பறியை தடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: