தேர்தல் பிரிவு உத்தரவு பெரம்பலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் டிரைவர்களுக்கு கண் சிகிச்சை முகாம்

பெரம்பலூர், ஜன. 29: பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக ஓட்டுநர்களுக்கான இலவ சக் கண்சிகிச்சை முகாம். மாவட்ட முதன் மை அமர்வு நீதிபதி மலர்விழி தொடங் கிவைத்தார். சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி பெரம்பலூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு, பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பெரம்பலூர் தண்ணீர்பந்தல் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகன டிரைவர்களுக்கான ஒருநாள் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவருமான (பொ) மலர்விழி தலைமை வகித்தார். பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் மைதிலி வரவேற்றார். பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான வினோதா, மங்கலமேடு டிஎஸ்பி தேவராஜ் முன்னிலை வகித்தனர். கண் சிகிச்சை முகாமில் பள்ளி, கல்லூரி வாகன டிரைவர்கள், இதர ஆட்டோ, லாரி, வேன், கார் டிரைவர்கள் என மொத்தம் 150 பேர் பங்கேற்று பரிசோதனை, சிகிச்சை செய்து கொண்டனர். பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.

Related Stories: