தரகம்பட்டி பெண்கள் உண்டு உறைவிட பள்ளியில் மாணவிகளுக்கு போட்டி வென்றவர்களுக்கு பரிசு

கடவூர், ஜன. 29: கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டதின் கீழ் தாய்மை அன்பு கரங்கள் தொண்டு நிறுவனம் மூலம் தரகம்பட்டியில் செயல்படுத்தப்பட்டு வரும் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பெண்கள் உண்டு உறைவிடப் பள்ளி 103 மாணவிகளைக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இணை இயக்குனர் கட்டுப்பாட்டிலுள்ள அரசு மருத்துமனைகளில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி அரசு மருத்துவமனை சார்ந்த பள்ளி மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது.

ஒவியப் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பரிசுகளை வழங்கி பாராட்டினார். முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சண்முகசுந்தரம், பெரியசாமி, சரவணன், கடவூர் வட்டார வளமைய மேற்பாh;வையாளர் முத்துக்குமார், வட்டாரக் கல்வி அலுவலர் பழனிச்சாமி, செந்தில்குமாரி, பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் தேன்மொழி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: