ராஜ வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதால் சுகாதார சீர்கேடு

கரூர், ஜன. 29: வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். கரூர் வெங்கமேடு மற்றும் குளத்துப்பாளையம் பகுதியில் ரயில்வே இருப்புப்பாதை உள்ளது. இதன் அருகே பாசன வாய்க்காலான ராஜவாய்க்கால் உள்ளது. ஒருகாலத்தில் பாசனத்திற்காக பயன்பட்டு கொண்டிருந்த இந்த வாய்க்கால் தற்போது கழிவுநீர் வாய்க்காலாக மாறி விட்டது. பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து விவசாயிகள் புகார்களை அளித்தும் கண்டுகொள்ளவில்லை. ஆக்கிரமிப்புகள் ஒருபக்கம் கழிவுநீர் ஒருபக்கம் என வாய்க்கால் மாறிவிட்டது.

தற்போது வாய்க்காலில் கழிவுநீர் கலந்து வருகிறது. கோரை புற்கள் மற்றும் கால்நடை தீவனத்திற்காக சோளத்தட்டைகள் பயிரிடப்பட்டுள்ள நிலையில் கழிவுநீரால் பெருத்த இழப்பும் சுகாதாரகேடும் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். இப்பகுதியில் உள்ள விளை நிலங்களிலும் காலி இடங்களிலும்,. கழிவுநீர் தேங்கிக் கிடக்கிறது. இதனால் சுகாதாரகேடும் ஏற்படுகிறது. வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories: