கொரோனா வைரஸ் தாக்குதல் முன்னெச்சரிக்கை மருத்துவமனைகளில் தனிவார்டு ரெடியாகிறது

தேனி, ஜன.29: சீனாவில் கொராேனா வைரஸ் பாதிப்பால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கேரளா, மும்பை, பெங்களூருவு, ைஹதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரானா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.  இதனை தொடர்ந்து மத்திய சுகாதார அமைச்சகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல் கட்டமாக நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள டாக்டர்கள், நர்சுகள், மருந்தாளுனர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களுக்கு கொராேனோ வைரஸ் பாதித்த நோயாளிகளை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. புனேயில் உள்ள வைரஸ் நோய்தொற்று மருத்துவ ஆய்வு மையத்தில் இருந்து கொராேனா வைரஸ் பரிசோதனை ‛கிட்டுகள்’ பல்வேறு முக்கிய மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து தேனி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: இதுவரை வந்த வைரஸ் பாதிப்புகளில் கொராேனா வைரஸ் கூடுதல் வீரியம் கொண்டதாக உள்ளது. இந்த வைரஸ் தாக்கப்பட்டவர்கள் நுரையீரல் செயல்இழப்பிற்கு உள்ளாகி உயிரிழக்கின்றனர். சீனாவில் ஏற்பட்ட பாதிப்புகளின் விவரம் முழுமையாக தெரியவில்லை. ஆனாலும் காற்றின் மூலமும், தொடுதல் மூலமும் பரவும் இந்த வைரஸ் மிக கடுமையானது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தவிர இந்த வைரஸ் பாதித்த முதல் 15 நாட்களுக்கு அதன் பாதிப்பு விவரம் பாதிக்கப்பட்டவர்களுக்கே தெரியாது. அதற்குள் அந்த நபர் மூலம் பலருக்கும் பரவி விடும். நோய்க்கு மருந்துகளும் இல்லாத நிலையில், இதனால் எந்த மாதிரி பாதிப்புகள் ஏற்படும் என்பதே பெரும் கேள்விக்குறியான விஷயமாக உள்ளது. இதனால் உலக சுகாதார நிறுவனம் கொடுத்துள்ள தகவல்களின் அடிப்படையில் தும்மல், இருமல், சளி, மூக்கடைப்பு உள்ளவர்களை கவனமாக கவனிக்க வேண்டும். தவிர நுரையீரல் பாதிப்பு தென்பட்டால் உடனே அவருக்கு துரிதமான சிகிச்சை வழங்கப்பட வேண்டும். கொராேனா வைரஸ் நுரையீரல் செயல்இழப்பினை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.

இதனால் நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்ட அளவில் கொரானா வரைஸ் பாதிப்பினை தடுப்பது, பாதிக்கப்பட்டவர்களை கையாள்வது குறித்த தயார்நிலை, மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்த விரிவான திட்ட அறிக்கையினை மத்திய அரசு கேட்டுள்ளது. தவிர அனைத்து பள்ளி மாணவர்களுக்கு கைகழுவும் பயிற்சிகள் வழங்கவும் அறிவுறுத்தி உள்ளது. சோப்புகள் மூலம்  கை கழுவ கூடாது. கைகளை கழுவ சோப் ஆயில் பயன்படுத்த வேண்டும். கைகளை தொடர்ந்து மூன்று நிமிடமாவது தேய்த்து கழுவ வேண்டும். எட்டு வழிமுறைகளில் கைகளை சுத்தப்படுத்த வேண்டும். குறைந்தபட்சம் முழு அளவிலான நுரை தொடர்ந்து 30 விநாடிகள் வரை கைகளில் மணிக்கட்டு வரை பரவி இருக்க வேண்டும். இப்படி கைகழுவும் முறை குறித்து மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை பாதிப்புகள் ஏதும் இல்லாவிட்டாலும், அதற்கான முழு தயார் நிலையில் இருக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: