சின்னமனூர் நெல்கொள்முதல் நிலையத்தில் சோதனை

சின்னமனூர், ஜன 29: தினகரன் ெசய்தி எதிரொலியாக சின்னமனூரில் நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகள் நேற்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.  சின்னமனூர் அரசு மருத்துவமனை சாலையில் தேனி கூட்டுறவு சங்க வளாகத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு வெளிமாவட்ட விவசாயிகளின் நெல்மூட்டைகளை கொள்முதல் செய்து முறைகேடு நடப்பதாக நேற்று தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தேனி மண்டல ஆய்வு குழு மேலாளர் சீத்தாராமன் உத்தரவின் பேரில், தரக்கட்டுபாடு குழு அதிகாரிகள் நேற்று சின்னமனூர் தேனி கூட்டுறவு சங்க நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது குடவுனில் இருந்த ஒட்டுமொத்த நெல் மூடை எண்ணிக்கையை சரிபார்த்தனர். குத்தூசி பயன்படுத்தி நெல்லின் தரத்தை சரிபார்த்தனர். பின்னர் கிராம அதிகாரியின் சீல் மற்றும் கையெழுத்திட்டு விவசாயிகளுக்கு அளித்துள்ள சான்றுகள் முழுவதும் ஆய்வு செய்தனர். அப்போது 6 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்தள்ளது தெரிந்தது. இன்னும் 1800 டன் வரையில் நெல் கொள்முதல் பாக்கியிருப்பதும் தெரிய வந்தது. உத்தமபாளையம் தாலுகாக தேனி தாலுகா அளவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றும், வெளி மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்யவில்லை என்றும் தெரிந்தது. சின்னமனூர் நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகள் முறைகேடு குறித்து நடந்த ஆய்வால் பரபரப்பு ஏற்பட்டது

Related Stories: