தேனி பாரதிதாசன் தொலைநிலை கல்வி மையத்தில் மாணவர் சேர்க்கை

தேனி, ஜன.29: தேனியில் செயல்பட்டு வரும் பாரதிதாசன் தொலைநிலை கல்வி மையத்தில் 2019-2020ம் ஆண்டுக்கான இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும் என கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.இது குறித்து பாரதிதாசன் பல்கலையின் சார்பில் தேனியில் செயல்பட்டு வரும் தொலைநிலைக்கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் ராஜா கூறியதாவது: தேனி சுப்பன் தெருவில் உள்ள பாரதிதாசன் பல்கலையின் தொலைநிலைக்கல்வி மையத்தில் 2019-2020க்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இளங்கலை பிரிவில் பி.லிட் தமிழ் இலக்கியம், பி.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், அரசியல் அறிவியல், பொதுமேலாண்மை, பி.எஸ்.சி., வேதியியல், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல்,  தகவல் தொழில்நுட்பம், கணிதவியல், புள்ளியியல், யோகா, பி.காம்., சி.ஏ., வங்கி மேலாண்மை, பி.பி.ஏ., பி.சி.ஏ., நுாலகவியல் ஆகிய படிப்புகளுக்கான சேர்க்கை நடந்து வருகிறது. தவிர முதுகலை படிப்புகளில் எம்.ஏ., பொருளாதாரம், ஆங்கிலம், வரலாறு, தமிழ், செய்தி தொடர்பு, பொதுநிர்வாகம், அரசியல் அறிவியல், கணிதவியல், வேதியியல், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், புவியியல், எம்.காம்., எம்.காம் நிதிநிலை மேலாண்மை, வங்கி மேலாண்மை, கணினி பயன்பாடு, எம்.எஸ்.சி., யோகா படிப்புகளுக்கு சேர்க்கை நடைபெறுகிறது. செய்முறை பொதுத்தேர்வுகள் தேனியிலேயே நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 99423 30605 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சேர விரும்புபவர்கள் ஜனவரி 31ம் தேதிக்குள் மையத்தை தொடர்பு கொண்டு தங்கள் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: