விதை விற்பனையாளருக்கு உரிமம் கட்டாயம்

சிவகங்கை, ஜன. 29: சிவகங்கை மாவட்டத்தில் விதை விற்பனையாளர்கள் கட்டாயம் உரிமம் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் விதை ஆய்வு துணை இயக்குநர் அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது, ‘சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிய விதை வணிகம் செய்ய உரிமம் பெற விரும்புவோர் விண்ணப்பம் அ படிவத்தில் பூர்த்தி செய்து ரூ. ஆயிரம் மட்டும் உரிய கணக்கு தலைப்பில் பாரத  ஸ்டேட் வங்கியிலோ அல்லது கருவூலத்திலோ செலுத்துச்சீட்டில் செலுத்த வேண்டும். கட்டிட வரைபடம், சொந்த கட்டிடமாக இருப்பின் வரி ரசீது, வாடகை கட்டிடமாக இருப்பின் உரிமையாளரின் சம்மத கடிதம், கட்டிட வரி ரசீது ஆகியவற்றுடன் ராமநாதபுரம் விதை ஆய்வு துணை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். உரிமம் வழங்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். உரிய காலத்தில் உரிமம் புதுப்பிக்க இ படிவத்தில் விண்ணப்பம் செய்ய வேண்டும். இதற்கான கட்டணம் ரூ.500 ஆகும். காலாவதி தேதியிலிருந்து அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள் ரூ.500 கூடுதல் கட்டணம் செலுத்தி உரிமம் புதுப்பிக்கலாம். விதை விற்பனை உரிமம் பெறாமல் விற்பனை செய்வோர் மீது விதைகள் (கட்டுப்பாடு) ஆணை 1983ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே விதை வணிகத்தில் ஈடுபட்டுள்ள விதை விற்பனையாளர்கள் உரிய உரிமங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: