தூய்மை நகரங்களுக்கான தேர்வில் மதுரை வெற்றி பெற மாணவர்கள் வாக்களிப்பு

மதுரை, ஜன. 29: தூய்மை நகரங்களுக்கான தேர்வில் மதுரை வெற்றி பெற மாணவ, மாணவிகள் ஏராளமானோர் வாக்களித்தனர். ஸ்வாச் பாரத் மிஷன் சார்பில் ஆண்டுதோறும் தூய்மை நகரங்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது. மதுரை மாநகராட்சிக்கு கடந்த முறை 201வது இடம் கிடைத்தது. இந்த முறை 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை அடிப்படையில் மதுரை மாநகராட்சி போட்டி போடுகிறது. மத்திய அரசின் ரகசிய ஆய்வுக்குழு அறிக்கை அடிப்படையில் 6 ஆயிரம் மதிப்பெண்களுக்கு போட்டி நடக்கிறது. தற்போது பொதுமக்கள் வாக்களிக்க ஜன.31 வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது வரை 70 ஆயிரம் வாக்குகள் பதிவாகி மதுரை 2வது இடத்தில் உள்ளது. நேற்று கல்லூரிகளுக்கு சென்று மாணவ, மாணவிகளிடம் மாநகராட்சி ஊழியர்கள் வாக்குகள் பெற்றனர். முற்றிலும் ெமாபைல் மூலம் மாணவ, மாணவிகள் வாக்களித்தனர். மதுரையின் தூய்மை குறித்து கேட்கப்படும் 7 கேள்விகளுக்கு தங்கள் பதில் மூலம் மதிப்பெண் வழங்க வேண்டும். ஏனெனில் தூய்மை நகரங்கள் தேர்வில் இம்மதிப்பெண்கள் முக்கிய இடம் வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: