சோழவந்தானில் விழிப்புணர்வு மனித சங்கிலி

சோழவந்தான், ஜன. 28: சோழவந்தானில் வாக்காளர் தினம், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை முன்னிட்டு விவேகானந்தா கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு தேர்தல் பிரிவு துணை தாசில்தார் தெய்வேந்திரன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் வெங்கடேசன், எஸ்ஐக்கள் சிவாஜிகணேசன், வாண்டையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் ராஜன் வரவேற்றார். காவல்நிலையம் அருகில் இருந்து தொடங்கிய பேரணியை தாசில்தார் கிருஷ்ணகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இதையடுத்து, முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்ற மாணவர்கள் வாக்காளர் தினம் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கோஷங்களுடன், துண்டுப்பிரசுரங்கள் வழங்கி சென்றனர். பின்னர் ஜெனகை மாரியம்மன் கோயில் அருகில் வருவாய் துறையினர், காவல் துறையினர், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் இணைந்து நீண்ட வரிசையில் ‘விழிப்புணர்வு மனித சங்கிலி’ நடத்தினர். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் நைனார் முகமது, சமயன், தலைமை காவலர்கள் செல்லப்பாண்டியன், செல்வராஜ் மற்றும் காவலர்கள், கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: