என்எஸ்எஸ் சிறப்பு முகாம்

வி.கே.புரம், ஜன. 29: வி.கே.புரம் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி சார்பில் என்எஸ்எஸ் சிறப்பு முகாம் நடந்தது. அருணாசலபுரத்தில் கடந்த 17ம் தேதி துவங்கிய என்எஸ்எஸ் சிறப்பு முகாமில், பிளாஸ்டிக் இல்லாத வனத்தை உருவாக்க வலியுறுத்தி பாபநாசம் வனச்சோதனை சாவடியில் இருந்து அகஸ்தியர் அருவி வரை உள்ள பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகளை வி.கே.புரம் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி என்எஸ்எஸ் மாணவர்கள் அகற்றினர்.முன்னதாக பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பற்றி பாபநாசம் வனச்சரகர் பாரத், சேரன்மகாதேவி மாவட்ட கல்வி அதிகாரி சுடலை ஆகியோர் பேசினர். திட்ட அலுவலர் அன்னைராஜ், பயிற்சி வனச்சரகர்கள் பிரபாகரன், ராம்பிரகாஷ், உதவி திட்ட அலுவலர் ஜஸ்டின் சகாயராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: