திருவண்ணாமலையில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நிறைவு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பங்கேற்பு

திருவண்ணாமலை, ஜன.29: திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 2 நாட்கள் நடைபெற்று வந்த மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 2019- 2020ம் கல்வி ஆண்டில் அனைத்து அரசு பள்ளி, நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைபள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையின் மனித வள மேம்பாட்டு துறை சார்பில் விளையாட்டு தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் தொடங்கிய விளையாட்டு போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடராஜன் ெதாடங்கி வைத்தார். இதில் 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முதல் நாள் போட்டிகளில் வாலிபால், கபடி, இறகுப்பந்து, சதுரங்கம், கேரம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று நடைபெற்ற போட்டியில்ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டெறிதல், வட்டெறிதல், ஈட்டி எறிதல், தொடர் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நேற்று மாலை பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

Related Stories: