காட்டுக்காநல்லூர் கிராமத்தில் அரசு குறைகேட்பு முகாம் தாசில்தார் பங்கேற்பு

கண்ணமங்கலம், ஜன.29: கண்ணமங்கலம் அடுத்த காட்டுக்காநல்லூரில் அரசு குறைகேட்பு முகாமில் ஆரணி தாசில்தார் மனுக்களை பெற்றுக்கொண்டார். கண்ணமங்கலம் அடுத்த காட்டுக்காநல்லூரில் அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான கோரிக்கை மனுக்கள் பெறும் முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ரேணு தலைமை தாங்கினார். கவுன்சிலர் கவிதாகாமராஜ், துணைத்தலைவர் சுதாகர், வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனர் வழக்கறிஞர் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் சுபிச்சந்தர் வரவேற்றார்.

இதில் ஆரணி தாசில்தார் தியாகராஜன் கிராம மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பேசினார். அப்போது, இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு அடுத்த மாதம் நடைபெற உள்ள அரசு முகாமில் தகுதியான பயனாளிகளுக்கு தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என கூறினார். இதில் துணை தாசில்தார் சத்யன், வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் கே.டி.குமார், விஏஓக்கள் பொற்கொடி, சரவணன், துரைராஜ், ரமேஷ்குமார், கிராம உதவியாளர்கள் ஞானவேல், ஆனந்தன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்

Related Stories: