திருச்செங்கோட்டில் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

திருச்செங்கோடு, நவ.29: திருச்செங்கோட்டில், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடந்தது.இதில் திருச்சி மாநாட்டில் உள்ளாட்சி பிரதிநிதிகள் திரளாக பங்கேற்க தீர்மானிக்கப்பட்டது. நாமக்கல் மேற்கு மாவட்ட  திமுக செயற்குழு கூட்டம்  அவைத்தலைவர் நடனசபாபதி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட  செயலாளரும், பரமத்திவேலூர் எம்எல்ஏவுமான  கே.எஸ்.மூர்த்தி தலைமை வகித்தார். துணை செயலாளா–்கள் சேகா், செல்வராஜ், தலைமை செயற்குழு உறுப்பினா–்கள் யுவராஜ்,செழியன் பொதுக்குழு உறுப்பினா் அன்பழகன், மாநில ஆதிதிராவிடா் நலக்குழு  இணை செயலாளா் பரமானந்தம், ஒன்றியச்செயலாளா–்கள் கபிலர்மலை சண்முகம்,வட்டூர் தங்கவேல், எலச்சிபாளையம் தங்கவேல், செல்வராஜ், பழனிவேல்,  ஆர்.சண்முகம், தனராசு, செல்வராஜ், நகர செயலாளா–்கள் கார்த்திகேயன், வெங்கடேசன், ரவிச்சந்திரன், பேரூர் செயலாளா–்கள் கதிர்வேல், ராமலிங்கம், ரமேஷ்பாபு, மணிமாரப்பன், மகாமுனி, சார்பு அணி நிர்வாகிகள் மதுரா செந்தில், மொளசி ராஜமாணிக்கம், சரவணசுந்தரம், மீன் செல்வம், ரவிமோகன், ஜிஜேந்திரன், கிரிசங்கா், தனகரன்,  மகளிர் அணி பூங்கோதை செல்லதுரை மற்றும்  சார்பு அணி துணை அமைப்பாளா–்கள்  மற்றும் முன்னோடிகள்  கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், வருகிற மார்ச் 1ல் நடைபெறும் திமுக தலைவர் ஸ்டாலின் புறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடும் வகையில் சுவர் விளம்பரங்கள் எழுதியும், பொதுக்கூட்டம் நடத்தியும், விளையாட்டுப்போட்டிகள் நடத்தியும் கொண்டாட முடிவானது. வருகிற 31ம் தேதி திருச்சியில் நடைபெறும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாட்டில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி தலைவர்கள் பங்கேற்க முடிவானது.

இம்மாதம் 24ம் தேதி  சென்னையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுத்த முடிவின்படி குடியுரிமை திருத்த சட்டம், என் ஆர்சி என்பிஆர் ஆகியவற்றை திரும்பபெற வலியுறுத்தி நடக்கும் கையெழுத்து இயக்கத்தை பிப்ரவரி 2 முதல்  8 வரை நடத்த  முடிவானது. இதனைக் கண்காணிக்க பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். துணை செயலர் செல்வராஜ் நன்றி  கூறினார்.

Related Stories: