காரிமங்கலம் பகுதியில் முள்ளங்கி விலை வீழ்ச்சி

காரிமங்கலம், ஜன.29: காரிமங்கலம் பகுதியில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் முள்ளங்கி விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். காரிமங்கலத்தை சுற்றியுள்ள சின்னமிட்டஅள்ளி, பெரியமிட்டஅள்ளி, திண்டல், மணிக்கட்டியூர், எலுமிச்சினஅள்ளி, முதலிப்பட்டி உள்ளிட்ட பகுதியில் சுமார் 100ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் முள்ளங்கியை சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதியில் சாகுபடி செய்யப்படும் முள்ளங்கிகளை அறுவடை செய்து, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி மற்றும் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு விவசாயிகள் ஏற்றுமதி செய்கின்றனர். காரிமங்கலம் பகுதியில் முள்ளங்கி அறுவடை செய்து தூய்மை படுத்தும் பணியில் விவசாயிகள் தீவிரமாக நடந்து வருகின்றனர். கடந்த வாரத்தில் 1 கிலோ ₹10க்கு விற்ற நிலையில், கடந்த சில நாட்களாக முள்ளங்கி 1 கிலோ ₹2க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Related Stories: