மங்களபுரத்தில் புதினா விளைச்சல் அமோகம்

நாமகிரிப்பேட்டை, ஜன.28:  நாமகிரிப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி செய்த புதினா செடிகள் செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. நாமகிரிப்பேட்டை அடுத்த மங்களபுரம், ஈஸ்வரமூர்த்தி பாளையம், ஒண்டிக்கடை, திம்மநாயக்கன் பட்டி, மத்துருட்டு, வேப்பிலைக்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் விவசாயிகள் புதினா சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதியில் புதினா சாகுபடிக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை காணப்படுவதால் விவசாயிகள் அதிகம் பயிரிட்டுள்ளனர். 3 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். வேலைஆட்களை கொண்டு களை யெடுத்தல், இயற்கை உரம் இடுதல் என, ஒரு ஏக்கரில் புதினா சாகுபடி செய்ய ₹20 ஆயிரம் முதல் ₹30 ஆயிரம் வரை செலவாகிறது. ஆத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து வாங்கிச்செல்கின்றனர். தற்போது புதினாவில் களையடுத்து அறுவடைக்கு தயார் செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அறுவடையை பொறுத்து புதினா விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: