அதகபாடி அருகே செண்டுமல்லி விளைச்சல் அமோகம்

தர்மபுரி, ஜன.29: தர்மபுரி மாவட்டம் அதகபாடி அருகே செண்டுமல்லி விளைச்சல் அமோகமாக உள்ளது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, பென்னாகரம், அதகபாடி, இண்டூர், மாரண்டஅள்ளி, காடுசெட்டிபட்டி, மகேந்திரமங்கலம், பஞ்சப்பள்ளி, காரிமங்கலம், பெரியாம்பட்டி, பெல்ரம்பட்டி, தொப்பூர், தொப்பையாறு அணை, வத்தல்மலை அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10ஆயிரம் ஏக்கருக்கு மேல், செண்டுமல்லி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதிகளில் பூக்கள் விளைவதற்கான சீதோஷ்ணநிலை சாதகமாக உள்ளதால், செண்டுமல்லி விளைச்சலும் அதிகமாக இருக்கும். இங்கு சாகுபடியாகும் பூக்கள் அனைத்தும் தர்மபுரி, ராயக்கோட்டை, ஓசூர், பெங்களூரு, சென்னை கோயம்பேடு, ஹைதராபாத் ஆகிய மார்க்கெட்டுகளுக்கு வேன்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டம் அதகபாடி அருகே சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் செண்டுமல்லி விளைவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் அதிக மழை காரணமாக விளைச்சல் அதிகரித்துள்ளது. இதையொட்டி சாமந்தி பூ கிலோ ₹50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: