காரிமங்கலம் அருணேசுவரர் கோயிலில் திருப்பணி தொடக்க விழா

காரிமங்கலம், ஜன.29: காரிமங்கலம் ஸ்ரீ அபித குஜாம்பாள் சமேத அருணேசுவரர் மலைக்கோயிலில் திருப்பணி தொடக்க விழா நாளை 30ம் தேதி நடக்கிறது. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் மலைக்குன்றின் மீது அமைந்துள்ள, பழமை வாய்ந்த ஸ்ரீ அபீதகுஜாம்பாள் சமேத அருணேசுவரர் கோயிலில் பிரதோஷம், பவுர்ணமி கிரிவலப் பூஜை, பங்குனி உத்திர விழா, தேய்பிறை அஷ்டமி பூஜை உட்பட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. பூஜைகளில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். வரலாற்று பெருமை வாய்ந்த இக்கோயிலை புனரமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள், பக்தர்கள் நீண்ட நாளாக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இக்கோயிலை புனரமைக்க நிதி ஒதுக்க ஒதுக்க வேண்டும் என தமிழக அரசை அமைச்சர் கே.பி.அன்பழகன் கேட்டுக்கொண்டுள்ளார். இதை அடுத்து கோயிலை புனரமைக்க அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி நேற்று மாலைகணபதி பூஜை, வாஸ்து பூஜையுடன் யாக நிகழ்வுகள் தொடங்கியது. நாளை 30ம் தேதி திருப்பணி தொக்க பாலாலய பூஜை காலை 7.30 மணிக்கு மேல் கோ பூஜை பூர்ணாகுதியுடன் தொடங்கி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் திருப்பணி விழா குழு தலைவரும், உயர்கல்வித் துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் தலைமையில், உதவி ஆணையர் பிரகாஷ், செயலாளர் சின்னசாமி முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்கள் செந்தில்குமார், சீனிவாசன், மலைக்கோயில் அர்ச்சகர் புருஷோத்தமன் மற்றும் ஊர் பொதுமக்கள் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Related Stories: