தர்மபுரி பிடமனேரி ஏரி அருகே சாக்கடையில் பிளாஸ்டிக் கழிவுகள் தேக்கம்

தர்மபுரி, ஜன.29: தர்மபுரி பிடமனேரி ஏரி அருகே சாக்கடையில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்குவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தர்மபுரி அடுத்த இலக்கியம்பட்டி ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. இதில் பிடமனேரி நகராட்சியை ஒட்டியபடி உள்ள பகுதியாகும். பிடமனேரி பகுதியில் சுமார் 5 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியை ஒட்டியபடி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஏரியில் கலக்கும் கால்வாய்யில், கழிவுநீர் கலப்பதால் ஏரிக்கரையை ஒட்டியபடி உள்ள வீடுகளின் முன்பு சாக்கடையில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி அடைத்தபடி உள்ளது. இதனால் இப்பகுதியில் கொசு உற்பத்தியாகி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் ஏரியில் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளாக கிடப்பதால், ஏரியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. ஏரியையும், சாக்கடையையும் மாசு படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை அடிக்கடி அப்புறப்படுத்த வேண்டும் என, பிடமனேரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: