மாட்டு சந்தையில் கால்நடைகள் ரூ.2 கோடிக்கு விற்பனை

திருப்பூர், ஜன.29:  திருப்பூர் மாட்டு சந்தையில் ரூ. 2 கோடிக்கு நேற்று மாடுகள் விற்பனையானது. திருப்பூர் சந்தை பேட்டை பகுதியில் வாரம் தோறும் திங்கட்கிழமை  மாட்டுச்சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு திருப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான அவிநாசி, பல்லடம், பொங்கலூர், தாராபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து இருந்து கறவை மாடுகள், கன்றுகள், எருமைகள், எருமை கன்றுகள் ஆகியவை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த வாரம் 1100 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், இந்த வாரம் 1200 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

இவற்றில் நன்கு வளர்ந்த பெரிய அளவிலான எருமை கன்றுகள் அதிகளவில் இருந்தன. அவை ஒன்று ரூ.17 ஆயிரம் முதல் ரூ.28 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. அதே போல விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட காளைகள் ஒன்று ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. கன்றுகள் ரூ. 8 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை விற்கப்பட்டது.  இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், இந்த சந்தையில் உள்ள மாடுகளை கோவை, பொள்ளாச்சி, கேரளாவை சேர்ந்த வியாபாரிகள் அதிகளவில் வாங்கி சென்றுள்ளார்கள். கால்நடைகளின் விலையும் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. அந்த வகையில் நேற்று ரூ.2 கோடி வரை விற்பனை நடந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: